கற்கும் இருவழி முறைகள் மற்றும் மாற்றிக்கொள்ளுதல்
வேறு முறைகள் போன்றில்லாமல், சுவிசில் இளையோர் ஆகக் குறைந்தது மத்திய பாடசாலைத் தரம் I ன் முடிவில், தாம் தொடர்ந்து பாடசாலை உயர்கல்வி வழியையா அல்லது தொழிற்கல்வி வழியையா தெரிந்தெடுக்கப் போகின்றார்கள் என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
இருப்பினும் இதன்போது எப்பொழுதும், தொழிற்கல்வியிலிருந்து உயர் கல்விக்கு அல்லது மறுபக்கமாக மாறிக்கொள்ள வசதிகள் உண்டு. இதற்கான அடிப்படை நிபந்தனை: ஒவ்வோரு தொழிற்கல்வியின் முடிவிலும் தொடர்ந்து மேலும் கற்பதற்கான கல்வி வழங்கப்பட வேண்டும்.
இதன்படி நீங்கள் சுவிசின் இருவழிக் கல்வி முறைகளில் உள்ள சந்தர்ப்பங்கள் குறித்து ஒரு எண்ணத்தைக் கொள்வதற்காக, இங்கு நீங்கள் தர்ந்தெடுக்கக்கூடிய பதவிகளுக்கான உதாரணங்களை (நீலத்தில், பிரெஞ்சு)வித்தியாசமான பகுதிகளில் கண்டுகொள்ளலாம்.
வங்கிகள் மற்றும் காப்புறுதிகள்
கட்டிடக்கலை
ஆலோசனை, பராமரிப்பு, சிகிச்சை
கற்றல் மற்றும் கற்பித்தல்
இரசாயனம், பிளாஸ்ரிக், கடதாசி
மின்சாரத் தொழில்நுட்பம்
சக்தி வழங்குதல், மின்சாரம் பொருத்துதல்
தொட்ட வடிவமைப்பு
உணவகம்/வீட்டமைப்பு
சுகாதாரம்/பராமரிப்பு
வியாபாரம், விற்றல்
கணனித்துறை மற்றும் ஊடகத்துறை
இயந்திரம்-உலோகம்
ஊடகம் மற்றும் தகவல்கள்
உணவு